திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறுமா.? சவுரவ் கங்குலி புதிய தகவல்.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.

இதனியையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 1,25,89,067 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெங்களூர் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விரைவில் அணியில் இடம் பெறுவார் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sourav ganguly says about 14th ipl


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->