இடம்பிடித்த வா.சுந்தர்! கேப்டனாக ரோஹித் & சூரியகுமார்! துணை கேப்டனாக கில்!
SLvIND Team India Suryakumar SKY
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 தொடருக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ், துணை கேப்டன் ஆக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்),
விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர்,
சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர்,
அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்),
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த்,
சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல்,
வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
வருகின்ற 27ஆம் தேதி முதல் இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருநாள், டி20 என இரு தொடர்களிலும் இந்திய அணிக்காக களமிறக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
SLvIND Team India Suryakumar SKY