தோனி  மீண்டும் இந்திய அணிக்கு இடம்பெற வாய்ப்பே இல்லை.! முன்னாள் கிரிக்கெட் வீரர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கணித்துள்ளார்.

வரும் மார்ச்  29ம் தேதி மும்பையில் 13 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சி.எஸ்.கே அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனியும் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணிக்காக முன்னாள் கேப்டனான தோனி விளையாடவில்லை. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியதாவது, ஐ.பி.எல். தொடரில்  விளையாடப்போகும் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என தான் கருதுவதாக தெரிவித்தார். 

இந்திய அணி தேர்வாளர்கள் தோனியை ஒதுக்கிவிட்டு, மாற்று வீரரை அடையாளம் காணும் பணியை ஏற்கெனவே தொடங்கி விட்டதால், தோனி இந்திய அணியில் மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினமான செயல் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shewak says dhoni not return to inidan team


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal