வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. தமிழக வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! 2 வீரர்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையிலான போட்டிகள் வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்,  குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்.

டி20 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல்  , யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அணியில் இடம்பெறவுள்ள வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால், முன்னெச்சரிக்கையாக ரிசர்வ் வீரராக 2 தமிழக வீரர்களை இந்திய அணி எடுத்துள்ளது.

தமிழக வீரரான ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளன.  ஐபிஎல்லில் நன்றாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஷாருக்கான். இவர் விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் ஆகிய இரண்டு உள்நாட்டு தொடர்களிலும் அபாரமாக ஆடி உள்ளார். 

அதேபோல, ஸ்பின்னரான சாய் கிஷோர் விசாகா தொடரில் அவரது பேட்டிங் திறமையை காட்டினார். ஆகையால், இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shahrukh khan and sai kishore join indian team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->