சஞ்சு சாம்சன் டிரேடிங் விவகாரம் சூடு பிடித்தது – ஜடேஜாவை விட்டுக்கொடுத்தா அது மிகப்பெரிய தப்பு - பிரியான்க் பஞ்சால் - Seithipunal
Seithipunal


2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள மினி ஏலத்துக்கு முன், வீரர்களின் டிரேடிங் முறை தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக பல அணிகள் தங்களது அணிகளை மறுவடிவமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பேசப்பட்ட டிரேடிங் விவகாரம் சஞ்சு சாம்சனின் அணிமாற்றம் ஆகும்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், விரைவில் அந்த அணியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தங்களது அணிக்குள் சேர்க்க விரும்புவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், சஞ்சுவை பெறும் நிபந்தனையாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் பிரேவிஸ் ஆகியோரை சிஎஸ்கே அணியிலிருந்து தங்களிடம் வழங்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்த சில நாட்களில் இந்த டிரேடிங் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமா என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆவல் நிலவுகிறது.

ஆனால் இந்த செய்தி குறித்து முன்னாள் குஜராத் வீரரான பிரியாங்க் பஞ்சால் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:“சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சனை தங்களது அணிக்குள் கொண்டு வந்தால் அது மிகப்பெரிய தவறாகும். ஜடேஜா தற்போது சிஎஸ்கே அணியின் இதயமாக இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக அணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அவரைப் போன்ற வீரரை வெளியேற்றுவது நியாயமற்றது,”என்று அவர் பதிவு செய்துள்ளார்.

அவரது கருத்துப்படி, ஜடேஜா சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர். 2010களின் நடுப்பகுதியில் இருந்து தொடர்ந்து தோனியின் நம்பகமான ஆல் ரவுண்டர் எனப் பெயர் பெற்றார். அணியின் சாம்பியன் பட்ட வெற்றிகளில், அவரது பங்களிப்பு மறக்க முடியாதது.

சிஎஸ்கே ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இதே கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர். “சிஎஸ்கே என்றால் தோனி, ஜடேஜா, ருதுராஜ் — இந்த மூவர்தான் அணி அடையாளம்” என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், சஞ்சு சாம்சன் அணியில் சேர்ந்தால் அணிக்கு ஒரு புதிய பேட்டிங் வலிமை கிடைக்கும் என்றாலும், ஜடேஜாவை இழப்பது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் சமநிலையை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிஎஸ்கே நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தில் இறுதி முடிவை இன்னும் எடுக்காத நிலையில், அடுத்த சில நாட்களில் சஞ்சுவின் டிரேடிங் விவகாரம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் தலைமையில் அணி புதிய பருவத்தை நோக்கி நகரும் இந்த நிலையில், ஜடேஜா தொடர்கிறாரா அல்லது சஞ்சுவுக்காக அவர் வெளியேற்றப்படுகிறாரா என்பது ரசிகர்களிடையே பெரும் விவாதமாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanju Samson trading issue heats up giving up Jadeja would be a big mistake Priyank Panchal


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->