சென்னை- டில்லி மோதல்; சி.எஸ்.கே.அணிக்காக தனது முதல் சத்தத்தை பூர்த்தி செய்த சஞ்சு சாம்சன்..!
Sanju Samson scores his maiden century for CSK in the clash against Delhi
2026 ஆம் ஆண்டுக்கான 19வது ஐபிஎல் தொடரின் 18 வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதன்படி, சென்னை- டில்லி அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 02 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ள சஞ்சு சாம்சன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 15 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் – ஆயுஷ் மாத்ரே இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரேவும் அரைச்சதம் அடித்து அசத்தினார். இறுதியில், 52 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 14 பவுண்டரிகளும், 04 சிக்சர்களும் அடித்தார்.
English Summary
Sanju Samson scores his maiden century for CSK in the clash against Delhi