சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ-யின் புதிய தலைவர் ஆகிறார்..?
Sachin Tendulkar to become the new president of BCCI
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக 2022, அக்டோபர் முதல் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அவருக்கு 70 வயதானதால், பி.சி.சி.ஐ., விதிகளின் படி அவரது பதவி முடிவுக்கு வந்தது.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பதவி வகித்திருந்த வேளையில் அவரது பதவிக்காலம் முடிந்த கையோடு முன்னாள் இந்திய வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி பெரும்பாலானோரது ஆதரவுடன் பிசிசிஐ-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக தற்காலிக பிசிசிஐ தலைவராக துணை தலைவர் ராஜூவ் சுக்லா தற்போது பொறுப்பில் உள்ளார். இதற்கிடையே அடுத்த புதிய பிசிசிஐ-யின் தலைவரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 28-இல் நடக்கவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ.-இன் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் (52), பி.சி.சி.ஐ., தலைவராக உள்ள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு சச்சின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சச்சின் தரப்பில் வெளியான செய்தியில் கூறியுள்ளதாவது: ' பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவராகப் போகிறார் சச்சின் என்ற ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம். அவற்றை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்,' என கூறப்பட்டுள்ளது.
English Summary
Sachin Tendulkar to become the new president of BCCI