இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இமாசலபிரதேச  மாநிலத்திலுள்ள தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றாலும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்காமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை எனஅனைத்து தொடரிலும் இடம்பிடித்து வருகிறார். ஆனால் அவர் தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கையில் காயம் ஏற்பட்டதாக கூறி அவர் நீக்கப்பட்டார். 

இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை சற்று அதிகமாக இருப்பதால், அவர் இலங்கை தொடருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ruturaj gaikwad may roll out for sl series


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->