ராஜஸ்தான் அணிக்கு மரண பயத்தை காட்டிய பாவெல்.. இறுதியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு மளமளவென ரன்களை குவித்தனர். தேவ்தத் படிக்கல் 35 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார். அவர் 65 பந்தில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி, 19 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 28 ரன்னிலும், பிரித்வி ஷா 37 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து சர்ப்ராஸ் கான் ஒரே ரன்னில் வெளியேறினார். 

அதன்பிறகு கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் இரண்டிலும், ஷர்துல் தாக்குர் 10 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பிறகு, இறங்கிய லலித் யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37  ரன்னில் ஆட்டமிழந்தார். 

19 வது ஓவரை பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வீசினார். மெய்டனாக வீசியதுடன், ஓவராக வீதி ஒரு விக்கெட்டையும் எடுத்தார். கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர்களை ரோவ்மேன் பாவெல் விளாசி அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 207 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RR vs DC Match RR Win The Match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->