#IPL2022 : ஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சில்.. சென்னையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லோம்ரோர் 42 ரன்களும், டுப்லஸ்ஸிஸ் 38 ரன்களும், கோலி 32 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 56 ரன்களும், மொயின் அலி 34 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் சென்னை அணி தனது பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal challengers Bangalore beat by Chennai super kings 13 runs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->