IND Vs ENG: லார்ட்ஸ் மைதானத்தில் ஓய்வை அறிவிக்கும் ரோகித் சர்மா..? இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறியது என்ன..?
Rohit Sharma to announce retirement at Lords
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த போட்டியில் ரோகித் சர்மா பெரியளவில் சோபிக்கவில்லை. முதல் போட்டியில் 11 ரன்களும், 02-வது போட்டியில் 26 ரன்களுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
03-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நடைபெறஉள்ளது. இந்த போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்து விடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதி செய்யும் வகையில் ரோகித்தும் அவருடைய பெற்றோர்களை லண்டனுக்கு அழைத்துள்ளார்.

அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ரோகித் ஷர்மாவுக்கு பிசிசிஐ வாய்ப்பு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் 20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதில், ஜெய்ஸ்வாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை இந்திய அணியில் விளையாட வைக்க இந்திய அணி முன்வந்திருப்பதாகவும் இதுதொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது.
தற்போது ரோகித்தின் ஓய்வு வதந்திகள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர்மீது அணி நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அதனை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ரோஹித் ஷர்மா போன்ற ஒரு பெரிய வீரருக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும், முதல் இரண்டு போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்கவில்லை, ஆனால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லார்ட்ஸில் ரோஹித் ஷர்மாவிடமிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு இன்னிங்ஸைக் காணலாம் என்றும், ரோஹித் போன்ற ஒரு வீரரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இன்னிங்ஸை நிச்சயமாகக் காண முடியும். இது பல பேட்ஸ்மேன்களுக்கு நடப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே, அவர் திணறினார் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Rohit Sharma to announce retirement at Lords