இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் ஷர்மா, கே.எல் ராகுல் நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது வங்கதேச அணியுடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. வங்கதேச அணியுடன் ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கேப்டனான கே.எல் ராகுல் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து கே.எல் ராகுவின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவர் கடந்த 16 போட்டிகளில் 10 முறை ஒற்றை இலக்க ரண்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இந்த 10 போட்டிகளும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கே.எல் ராகுலை மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கே.எல் ராகுல் இடம்பெறவில்லை. 

இதற்கு கே.எல் ராகுலுக்கு ஜனவரி மாதம் நான்காவது வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கே.எல் ராகுலின் ஃபார்ம் முதன்மை காரணமாக அமைந்துள்ளது. அதே போன்று வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma KL Rahul out against Sri Lanka series


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->