சச்சின், கவாஸ்கர், ஷேவாக் வரிசையில் ரோஹித்! தோனியின் சாதனையை தகர்த்த கோலி!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே ஆக்லாந்தில் நடைபெற்று வரும் மூன்றாவது 20 ஓவர் போட்டியில்  மோதுகின்றன.  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மாவும் களமிறங்கினார்கள். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் சொதப்பிய ரோஹித் ஷர்மா, இந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாட தொடங்கினார்.  ஹாமிஷ் பென்னட் வீசிய 6 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாச 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.  இது அவருடைய இரண்டாவது அதிவேக அரைசதமாக பதிவானது. 

இதனிடையே அவர் தொடக்க ஆட்டக்காரராக அதிவேகமாக 10000 ரன்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் தொடக்க ஆட்டக்காரராக 10000 ரன்களை எடுப்பதற்கு 219 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார்.  அவருக்கு முன்னதாக இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 214இன்னிங்ஸ்களில் தொடக்க ஆட்டக்காரராக 10000 ரன்களை எடுத்துள்ளார். 

இந்திய தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக 10000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் சேவாக் உள்ளிட்டோருடன் ரோஹித் ஷர்மா இணைந்துள்ளார். அதேபோல இந்த போட்டியின்போது விராட் கோலியும் இந்திய அணியின் கேப்டனாக 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rohit reached 10000 runs as opener in international cricket


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->