எல்லோரும் தடுமாறிய வேளையில், வெற்றிக்கு கைகொடுத்த ரோகித் ஷர்மாவின் யுக்தி!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது கடந்த 24ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.  2 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். ஆனால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மட்டும் அனைத்து இன்னிங்ஸ்களிலும் ரன் குவித்தது எப்படி என புருவங்களை உயர்த்தி சிந்திக்காமல் இல்லை. இந்த ஆடுகளுங்களுக்கு அவருடைய பாணியிலான ஆட்டம் கை கொடுப்பதாகவும், ஆடுகளத்தில் சரியான பந்துகளை மட்டுமே சரி அடித்ததால் தான் அவரால் ரன் குவிக்க முடிந்தது என பலரும் தெரிவிக்கின்றனர். மற்ற வீரர்கள் தவறான பந்துகளையும் தடுத்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்தனர். 28 ஸ்பின் விக்கெட்டுகளில் 21 விக்கெட்டுகள் சுழலாமல் வந்த பந்துகளுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 161 ரன்கள் அடித்தது அந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தது. அதே போல இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமே 387 ரன்களுக்குள் முடிவடைந்த நிலையில், ரோஹித் சர்மா மட்டுமே 91 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற ஆடுகளம் இல்லை என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. இந்த பிச்சில் பேட்டிங் செய்வது நன்றாகவே இருந்தது. சரியான பந்துகளை அடித்து ஆடினால் சிறப்பாக பேட்டிங் செய்யலாம் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit dominate the series in batting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->