சச்சினின் உலகக்கோப்பை சாதனை கோட்டைக்குள் புகுந்த ரோகித் சர்மா! உலக சாதனை படைக்கவும் வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் என்பவை முறியடிக்க முடியதாவை என கூறப்பட்டு வந்தது. 6 உலககோப்பைகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 44 இன்னிங்சில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய இரண்டு உலககோப்பைகளில் அவர் தான் அதிக ரன்கள் எடுத்தவர். ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவரும் இவர் தான்.. 

இந்த தொடரில் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வரும் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இந்த தொடரில் 7 இன்னிங்சில் ஆடியுள்ள அவர் 4 சதம் மற்றும் 1 ஒரு அரைசதம் என தொடரின் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 546 ரன்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு முதல் இரண்டு இடங்களில் இருந்த டேவிட் வார்னர் 516 ரன்களுடனும், ஆரோன் பின்ச் 504 ரன்களுடனும் இருந்தனர். அதனை ரோகித் முறியடித்துள்ளார். அவரின் முதல் இடத்திற்கு வங்கதேசத்தின் சாகிப் 544 ரன்களுடன் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

உலகக்கோப்பை ஒரே தொடரில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் தான் முதல் மூன்று இடத்தினை ஆக்கரமித்து இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் ட்ராவிட் 1999 தொடர் எடுத்து இருந்தார். தற்போது சச்சினின் இந்த கோட்டையை தகர்த்து அதில் ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளார். உலக அளவில் ஒரே தொடரில் அதிக ரன்களை குவித்து, முதல் இடத்தில் இருப்பது சச்சின் தான்.

2003 தொடரில் 673 ரன்களை எடுத்திருந்தார். 1996 தொடரில் 523 ரன்களையும், 2011 தொடரில் 481 ரன்களையும் எடுத்து அசத்தியிருந்தார். தற்போது இந்த கோட்டைக்குள் 546 ரன்களுடன் ரோஹித் நுழைந்துவிட்டார். இந்திய அணிக்கு உறுதியாக இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் சச்சினின் சாதனை கூட தகர்க்கப்படலாம்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit crossed sachin world cup record history


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->