தித்திக்கும் சுவையில் 'நேந்திர பழ பாயாசம்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க  - Seithipunal
Seithipunal


சுவையான நேந்திர பாயாசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
நேந்திரன் பழம் 
வெல்லம் 
தேங்காய் பால் 
ஏலக்காய் பொடி 
நெய் 
முந்திரி
திராட்சை

செய்முறை: 
முதலில் நேந்திரன் பழத்தை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி ஆவியில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்துள்ள பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள நேந்திர பழக் கூழை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வேக வைக்கவும். 

அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து நன்றாக வதக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நேந்திர பழ பாயாசம் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nendram pazham payasam recipe tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->