சென்னை அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்! ராஜஸ்தானிடம் இருந்து வாங்கிய சென்னை!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டிகளில் இந்த வருடம் வீரர்களுக்கான பெரிய ஏலம் நடைபெறாத நிலையில், சிறிய அளவிலான ஏலம் நடக்க உள்ளது. அதற்காக வீரர்களை மாற்றுவதற்கான கடைசி நாளாக நேற்று நிர்ணயிக்கப்பட்டது. 

சென்னை அணியில் கடந்த சீசனில் 6.75 கோடி வாங்கப்பட்ட  பியூஸ் சாவ்லா, 2 கோடிக்கு வாங்கப்பட்ட முரளி விஜய் ஆகியோரை வெளியேற்றுவது உறுதி என்றும், அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற தொடருடன் ஓய்வை வாட்சன் அறிவித்ததால், 2 கோடி ரூபாயும் மிச்சப்படும். 7.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேதார்  ஜாதவ் வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 6 வீரர்களை வெளியேற்றியது. 

அணியில் இருந்து கே ஜாதவ், பி சாவ்லா, எம் விஜய், ஹர்பஜன்  சிங், ஷேன் வாட்சன், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். 

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து இந்தியாவின் மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பணம் கொடுத்து வாங்கியுள்ளது. அவரை சென்னை அணியின் ரசிகர்கள் வரவேற்று பதிவிட்டு வருகிறார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Robin Uthappa trade to CSK


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->