ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிட்னியில் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிப்பவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் போட்டியில்  சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியவர். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வருகிறார். 

இந்நிலையில், டேவிட் வார்னர் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சிட்னி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மரோப்ராவில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில், சட்ட வரம்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான மதுவின் அளவு அவரிடம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிட்னி காவல்துறையின் அறிக்கையின் படி, வார்னர் சோதனைச் சாவடிக்குச் சற்று முன்பு தனது வாகனத்தை நிறுத்த முயன்றதாகவும்,இதனால், சந்தேகம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் அவரை அணுகி சோதனையிட்டபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் வார்னர் கைது செய்யப்பட்டு மரோப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது இரத்த அணுக்களின் எண்ணிக்கை 0.1 எனத் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மே மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australian cricketer David Warner dramatically arrested in Sydney


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->