ரிஷப் பண்ட் காலில் படுகாயம்! வலியால் கதறிய ரிஷப் பண்ட்! மைதானத்துக்குள்ளேயே வந்த ஆம்புலன்ஸ்! என்ன நடந்தது?
Rishabh Pant suffers serious leg injury Rishabh Pant screams in pain Ambulance arrives inside the stadium What happened
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக, விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டஸ்மானுமான ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்து மைதானத்தை விட்டு விலகியுள்ளார்.
பண்ட், 48 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 37 ரன்கள் எடுத்திருந்தபோது, கிறிஸ் வோக்ஸின் புல்லரெந் பந்தை ரிவர்ஸ் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் அந்த பந்து நேராக வலது காலைத் தாக்கியது. உடனே அவர் வலியால் அலறி, தரையில் உட்கார்ந்துவிட்டார்.
காலைப் பார்த்தபோது,
உடனே பிசியோதெரபிஸ்ட் பரிசோதனை செய்தார். ஆனால் காலில் கால் வைத்துக்கொள்ள முடியாததால், கோல்ஃப் வண்டி (அம்புலன்ஸ்) கொண்டு வரப்பட்டு பண்ட் மைதானத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இதனால், பண்ட்டுக்கு பதிலாக ஜடேஜா களமிறங்கினார். அவரின் காயம் படுகாயம் என்றே கருதப்படுகிறது. எனவே, இந்த டெஸ்ட்டில் அவர் மீண்டும் பேட்டிங் செய்வது மிகுந்த சந்தேகத்துக்குரியது. அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகவே காயம்…
3வது டெஸ்ட்டிலும் ரிஷப் பண்ட் விரலில் காயம் அடைந்திருந்தார். அதனால் விக்கெட் கீப்பிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்தார். அந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது புதிய காயம் ஏற்பட்டிருப்பது, இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நிலை
இந்திய அணி,
-
4 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது
-
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – 58 ரன்கள்,
-
சாய் சுதர்சன் – 61 ரன்கள் (அவரது முதல் டெஸ்ட் அரைசதம்)
இந்நிலையில் பண்ட் மீண்டும் களமிறங்க முடியுமா என்பது மருத்துவ பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தது.இந்த செய்தி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rishabh Pant suffers serious leg injury Rishabh Pant screams in pain Ambulance arrives inside the stadium What happened