தென்னாபிரிக்காவுடனான தோல்விக்கு இது தான் காரணம்.. ரிஷப் பண்ட் வேதனை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் - இஷான் கிஷன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இஷான் கிஷன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 5 ரன்னிலும், பாண்டியா 9  ரன்னுடன் வெளியேறினர். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது.

இதையடுத்து,149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி கேப்டன் பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக கிளாசன் 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 20  ரன்னுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி 2 - 0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவுடனான இந்தத் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். புவனேஷ் குமார் உட்பட அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முதல் 8 ஓவர்களில் சிறப்பாக வீசினார். ஆனால் அதற்கு பிறகு எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. நாங்கள் திட்டமிட்டிருந்த அப்படி எதுவும் நடக்கவில்லை. 

போட்டியின் இரண்டாவது பாதியில் எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. டெம்பா பவுமாவும், ஹென்ரிச் கிளாசனும் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். நாங்கள் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அடுத்த போட்டியில் தவறுகளை சரி செய்து கொள்வோம் என நம்பிக்கை உள்ளது. இன்னும்  உள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளதால் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rishabh pant says 2nd t20 match sa win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->