நாயகன் மீண்டும் வரான்.. தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal



இந்தியா கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்  தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரிஷப் பந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

 இந்த விபத்தில் அவருக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது, மேலும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல்களிலும் காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் ரிஷப் பந்த் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்து தற்போது உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

அதன்படி உடற்பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ரிஷப் பந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh pant heavy workout in Gym


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->