பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? பிரம்ம முகூர்த்தத்தில் சுப காரியங்கள் செய்வதால் என்ன பலன்?
Brahma muhurtam importance benefits in tamil
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை. பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் போன்றவற்றை பார்த்து தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.
நல்ல நாள் கிடைக்கும் பொழுது நல்ல நேரம் கிடைக்காது. அதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்படும். இதனை தவிர்க்க பிரம்ம முகூர்த்தத்தை தேர்வு செய்யலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நல்ல நாள் மட்டும் பார்த்தால் போதும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கலாம்.

அதிகாலையில் எழுவது பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. வைகறைப்பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளி கதிர்கள் சக்தி வாய்ந்தவையாக இருக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எழும் பொழுது அல்லது சுப காரியங்கள் செய்யும்பொழுது சக்தி வாய்ந்த ஒளி கதிர்கள் உடம்பில் பட்டு உற்சாகத்தையும் பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.
மேலும் உடல் ஆரோக்கியத்தையும் கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. சனிக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்று இருப்பதால் அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
அதிகாலையில் எழுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் சிறப்பான முடிவுகள் எடுக்க தோன்றும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கம் கிடைக்கும். விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படும்.

இந்த நேரத்தில் தேவதையின் செழிப்பான கிரகணங்கள் பூமியை நோக்கி பயணிக்கும். இந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்யும்பொழுது கடவுள் அருள் முழுமையாக கிடைக்கும். தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம்.
அவ்வாறு செய்யும் பொழுது கட்டாயம் வெற்றியில் தான் முடியும். கிரக தோஷம், ராகு, கேது தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வது மட்டுமல்லாமல் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் தம்பதிகளிடையே பிரிவினை ஏற்பாடு ஏற்படாது. அவர்களது வாழ்க்கை சிறக்கும்.
English Summary
Brahma muhurtam importance benefits in tamil