பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த 'வெந்தயக்கீரை' சாப்பிடுவதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


* வெந்தயம் மட்டுமல்லாமல் வெந்தயக் கீரையிலும் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது. வெந்தயக் கீரையை வேக வைத்தோ அல்லது நல்லெண்ணையில் வதக்கியோ சாப்பிட்டால் பித்த மயக்கம் நீங்கும். 

* வெந்தயக் கீரையை தோசை மாவுடன் சேர்த்து அரைத்து தோசை, இட்லி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலப்படும். உடல் வலி நீங்கும். வெந்தயக் கீரையை அரைத்து உடல் வீக்கம் தீ புண்கள் மீது பத்து போட்டால் விரைவில் குணமடையும். 

* வெந்தயக் கீரையை அத்திப்பழம் உடன் சேர்த்து அரைத்து உடலில் ஏற்பட்ட கட்டிகள் மீது வைத்து கட்டினால் உடனடியாக குணமடையும். படைகள் மீது பூசி குளித்து வர நல்ல பயன் கிடைக்கும். 

* வெந்தயக் கீரை சமைத்து சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 

* மேலும் அரிசி கஞ்சி செய்யும் பொழுது வெந்தயக் கீரையை சேர்த்து காய்ச்சி குடித்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.

* வெந்தயக் கீரை, மஞ்சள், கடுகு, பெருங்காயம் சேர்த்து நெய்யில் வதக்கி பின்பு அரைத்து உட்கொண்டால் வயிற்று வலி, பொருமல் போன்றவை முழுமையாக குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vendhayakeerai health benefits in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->