சிஎஸ்கே மற்றும் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி ஆர்சிபி அணி செய்துள்ள புதிய சாதனை..! - Seithipunal
Seithipunal


18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.நடப்பு தொடரில் பெங்களூரு அணி 03 வது இடத்திலும், மும்பை அணி 06 வது இடத்திலும், சென்னை அணி கடைசி 10-வது இடத்திலும் உள்ளன. இந்த அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது. 

 அடுத்தபடியாக 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 02-வது இடத்திலும், 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB has made a new record by beating CSK and Mumba


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->