இந்த நான்கு வீரரை தக்கவைக்க போகும் ஆர்சிபி.. சூசகமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அணியில் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இருந்தபோதும் கோப்பையை வெல்லவில்லை. ஐபிஎல் சீசன் 13,14 சீசனில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளே ஆஃப் எலிமினேஷன் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி வெளியேறியது. இதனால் அடுத்த சீசனில் நிச்சயம் கோப்பையை வென்ற வேண்டும் என்ற துடிப்பில் உள்ளது. 

இதுவரை பெங்களூர் அணி கேப்டனாக இருந்த விராட் கோலி. 15 வது சீசன் முதல் வீரராக மட்டுமே அணியில் நீடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் புதிய கேப்டனை தேர்வு பெய்யும் பணியில் பெங்களூர் அணி இறங்கியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் காலண்டர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பெங்களூர் அணி, யார் யாரை தக்க வைக்கப் போகிறோம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது. அந்த காலண்டரில் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அது ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வேலை  குறிக்கிறது. நவம்பர் 5ஆம் தேதி எண்ணிற்கு மேல் ஒரு கிரீடம் பொறிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி விராட் கோலியின் பிறந்த நாளாகும். இதனால் கோலி தக்க வைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

அடுத்து 23 ஆம் தேதி எண்ணிற்கு பக்கத்தில் சுழற்பந்து படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜூலை 23ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் யுஜ்வேந்திர சாஹகை குறிப்பதாகும். அடுத்து மீண்டும் 23ஆம் தேதிக்கு அருகில் பர்ப்பிள் தொப்பி பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்ஷல் படேலின் பிறந்த நாளைக் குறிக்கிறது. ஆகையால் இந்த நான்கு பேரையும் ஆர்சிபி அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rcb 4 plays in ipl


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->