டேவிட் வார்னர்-க்கு எதிராக புதிய சாதனை படைத்த ரவி பிஷ்னோய்.!
ravi bishnoi to david warner
ஐபிஎல் 15-வது சீசனின் 15 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் இருந்த டேவிட் வார்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை.

பிரித்வி ஷா 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 12 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட், சர்பரஸ் கான் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். சப்ராஸ் கான் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இருவரும் இதுவே இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்களை மட்டுமே எடுத்தது.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி காக் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இருந்தபோதிலும் லக்னோ அணி 19.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். பிஷ்னோய் டேவிட் வார்னருக்கு எதிராக மூன்று இன்னிங்ஸ்களில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார். வார்னருக்கு எதிராக வேறு எந்த ஐபிஎல் பௌலரும் இப்படி ஒரு ரெக்கார்ட்டை வைத்திருக்கவில்லை. இதன் மூலம் பிஷ்னோய் புதிய சாதனை படைத்துள்ளார்.
English Summary
ravi bishnoi to david warner