ஹாட்ரிக் பாண்டியாவின் செயலால் தொடர் தோல்வியை சந்திக்கும் மும்பை..ராஜஸ்தான் அணி அபார வெற்றி.!!
Rajasthan team win the match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கேட்களை இழந்து 179 ரன்களை எடுத்தது.

போட்டியின் இரண்டாம் பாதியில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 18.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 104 ரன்களை குவித்தார்.
ராஜஸ்தான் அணி இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது . மும்பை அணி விளையாடிய இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
English Summary
Rajasthan team win the match