இந்திய வீரர்களை மோசமாக பேசிய வங்கதேச அணி.. மைதானத்தில் ஏற்பட்ட மோதல்... வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


ந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கேலி செய்துள்ளனர் இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.

தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் நடந்த இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவும், நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. அதேபோல முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்த வங்கதேசம் அணியும் உற்சாகத்துடன் களம் கண்டது. 

நேற்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 47.2ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. யாசவி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார்.

178 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய விளையாடிய வங்கதேச அணி. 54 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.

இதையடுத்து, 30 பந்துகளுக்கு 7 ரன்கள் என்று வெற்றி இலக்கு குறைக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், வெற்றிபெற்ற வங்கதேச அணி வீரர்கள், தோல்வியுற்ற இந்திய வீரர்களை கேலி செய்து பேசி உள்ளனர்.

மேலும் சில தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மைதானத்தில் இருந்த இந்திய அணி பயிற்சியாளர், இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார். மேலும், மோதல் அதிகமானதன் காரணமாக அதிகாரிகள் பலரும் மைதானத்திற்கு வந்து வீரர்களை எச்சரித்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

players fight in ground after match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->