இந்திய-ஏ அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம்; சிஎஸ்கே வீரருக்கும் வாய்ப்பு..!
Opportunity for young player Vaibhav Suryavanshi and a CSK player in the India A squad
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய-ஏ அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. வரும் ஜூன் 09-ம் தேதி இந்த தொடர் தொடங்கி, ஜூன் 21-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதையடுத்து இலங்கை உடன் இரண்டு போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் இடம் பெற்றுள்ள இந்திய அணியை திலக் வர்மா கேப்டனாக வழி நடத்தவுள்ளார்.
அணி விவரம்: ரியான் பராக் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்குர், யுத்வீர் சிங், அன்ஷுல் காம்போஜ், அர்ஷத் கான்.
English Summary
Opportunity for young player Vaibhav Suryavanshi and a CSK player in the India A squad