கிரிக்கெட்டில் உருவெடுக்கும் அதிவேக புயல்! மீண்டும் ஒரு அக்தரா?!  - Seithipunal
Seithipunal


உலக கிரிக்கெட் அரங்கில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் எப்போதும் உண்டு. ஆனால் ஆசிய அணிகளை பொறுத்தவரை அதில் சற்று பலம் குறைவு தான். இருந்தாலும் இதில் பாகிஸ்தான் அணி சற்று பலம் வாய்ந்தது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், அக்தர் போன்றோர் கிரிக்கெட் உலகையே மிரட்டும் அளவில் பந்துவீசினார்கள். 

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அதிரடி புயல் வேக இளம் பந்துவீச்சாளரை வெளிக்கொண்டு வந்ததுள்ளது CPL 2019.

தற்போது  வெஸ்ட் இண்டீஸில்  நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் 2019 கிரிக்கெட் 3 வது போட்டியில் டிரிபங்கோ நைட் ரைடர்ஸ்(TKR) மற்றும் ஜமைக்கா டல்லவாஸ்(JT) அணிகள் மோதி கொண்டன. 

இந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதே ஆகும் முகமது ஹஸ்னைன் மணிக்கு 155.1 km அதிவேகமாக பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அவரின் வேக பந்து வீச்சு அதோடு நிற்காமல் CPL 2019-ல் முதல் ஐந்து வேக பந்துகளின் பட்டியலில் முகமது ஹஸ்னைனே மூன்று இடங்களை பிடித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள அவர் விரைவில் தேசிய கிரிக்கெட்டில் ஆளுமை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new pacer find in CPL2019 from Pakistan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->