தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக வீராங்கனை ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரங்கனை ஷர்வானிகா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் ஓபன் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது.

இதில் தமிழக வீராங்கனை ஷர்வானிகா விளையாடிய 11 சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 11 புள்ளிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இவர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National chess championship tamilnadu child Sharwanika champion


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->