மெக்ராத்தின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்த நாதன் லயன்..!
Nathan Lyon broke McGraths record and created new history
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நாதன் லியன். போட்டியின் முதல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே குமார் சங்ககார விக்கெட்டை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா இடதுகை ஸ்பின்னர்களில் சிறந்தவராக உருவெடுத்தார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நாதன் லியன், புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார். இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற அவர் இரண்டாம் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கட் மற்றும் ஒல்லி போப் இரண்டு பேரின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 564 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லியன், ஆஸ்திரேலியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய 02-வது பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். 563 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த மெக்ராத்தை பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் ஜாம்பவான் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, ஆஸ்திரேலியா ஆப் ஸ்பின்னர்களில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா ஆப் ஸ்பின்னரான நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை எடுப்பது தான் அடுத்த இலக்கு என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nathan Lyon broke McGraths record and created new history