எனது வெற்றிக்கான காரணம் இதுதான்: முகமது ஷமி ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி தனது வெற்றிக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் பிளேயிங் லெவலில் இடம் பெறாத முகமது ஷமி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். 

இவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். 6 போட்டிகளில் விளையாடி இதுவரை 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டைகளை வீழ்த்திய வீரராக முகமது ஷமி உள்ளார். 

விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமின்றி குறைந்த ரன்கள் எடுக்கும் விதத்திலும் அவர் பந்துவீச்சு உள்ளார். இந்நிலையில் பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்படுவதன் காரணம் குறித்து முகமது ஷமி தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்திருப்பதாவது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நான் எப்போதும் வந்து வீச்சுவேன். விக்கெட் எப்படி இருக்கிறது. வந்து ஸ்விங் ஆகிறதா இல்லையா என்பதை கவனிப்பேன் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் நான் ஸ்டெம்பை குறி வைத்து பந்து வீசுவேன். 

அப்போது வீசும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளையாட முயற்சிக்கும் போது விக்கெட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். உலககோப்பை தொடர் ஒன்றில் அதிக முறை விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் முகமது ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

my success reason Mohammad Shami


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->