#IPL2022 : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி.. பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி.!
Mumbai Indians win by 5 wickets against Delhi capitals
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 69வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 39 ரன்களும், ரோமன் பவுல் 43 ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறி, காத்திருப்பு பட்டியலில் இருந்த பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
English Summary
Mumbai Indians win by 5 wickets against Delhi capitals