ரோஹித் சர்மாவின் அதிரடி; ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி வெற்றி; புள்ளி பட்டியலில் 03 ஆம் இடம்..!
Mumbai defeated Hyderabad moved to 3rd place in the points table
ஐ பிஎல் போட்டியில் 41 வது லீக் போட்டி, இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதின. முதலில் டாஸில் வென்ற மும்பை அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 08, ரன்களிலும், இஷான் கிஷன் 01, நிதிஷ்குமார் 02, ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து அனிகெட் வெர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக, ஹென்ரிச் க்ளாசன், அபிநவ் மனோகர் இருவரும் ஒரளவு நிலைத்து நின்று ஆடினர். இதில் அதிகரி காட்டிய ஹென்ரிச் க்ளாசன், அரை சதம் கடந்து, 44 பந்துகளில் 02 சிக்ஸர்கள், 09 பவுண்டரிகள் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அபிநவ் மனோகர், 37 பந்துகளில் 03 சிக்ஸர்கள், 02 பவுண்டர்கள் உள்பட 43 ரன்களில்ஆட்டமிழந்தார். இறுதியில், ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 08 விக்கெட்டுகளை இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பாக டிரன்ட் போல்ட், சிறப்பாக பந்துவீசி 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

144 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியில் ரையன் ரிகல்டன் 07 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 70 ரன்களிலும், வில்ஜாக்ஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 15.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து மும்பை அணி அபார வெற்றி பெற்றது. அணியின் சூரிய குமார்யாதவ் 40 ரன்களிலும், திலக் வர்மா 02 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர்.
இறுதியில், 07 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 03 வது இடத்தை பிடித்துள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Mumbai defeated Hyderabad moved to 3rd place in the points table