'கேப்டன் கூல்' அடைமொழயை வர்த்தக முத்திரை கோரி விண்ணப்பித்துள்ள எம்.எஸ்.தோனி..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தோனி ரசிகர்களால் 'கேப்டன் கூல்' என அழைக்கப்படுகிறார்.  இந்நிலையில், அவரது வர்த்தக முத்திரை பதிவு செய்து அதற்காக விண்ணப்பித்துள்ளார்.

M.S.தோனியின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என குறித்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 05-ந்தேதி தோனி சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பதிவு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, விளையாட்டுக்கான பயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் வழங்குதல், விளையாட்டு பயிற்சி மற்றும் சேவைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தோனி உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் ஹால் ஆப் பேமில், இந்த மாத தொடக்கத்தில் தோனியின் பெயர் சேர்க்கப்பட்டட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MS Dhoni has filed for trademark of the nickname Captain Cool


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->