#CSK அணியின் முக்கிய வீரர் விலகல்.. ரசிகர்களுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வரும் மே 27 ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 18 வது ஐபிஎல் தொடரின் முக்கியமான ஆட்டம் நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் கவுண்டர் மொயின் அலி நாளையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு திரும்ப உள்ளார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பத்ரிநா தீபக் சஹார் முஸ்தஃபுசூர் ஆகியோர் இடம்பெறாத நிலையில் தற்போது மொயின் அலியும் விலகுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னாடி வாங்க கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moeen Ali withdraw from IPL 2024


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->