ஓய்வை திரும்ப பெற்றார் மொயின் அலி.. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சேர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் ஆஷஸ் தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படுகிறது.

இதற்கிடையே இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவணம் செலுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மொயின் அலியின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்து நடைபெறும் ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மொயின் அலியின் சுழல் பந்து வீச்சும், பேட்டிங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Moeen Ali has taken back his retirement from Test cricket


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->