சிஎஸ்கே-ன் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது நேற்றுடன் முடிவடைந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி கன மழையின் காரணமாக நேற்று நடைபெற்றது.

அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை -குஜராத் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 96 ரன்கள் குவித்தார்.

அதனைத்தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

அதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போட்டி தடைப்பட்டது. இதனையடுத்து DLS விதிப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.

பரபரப்பாக சென்ற இந்த இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த வகையில் மோகித் சர்மா வீசிய 5வது சிக்ஸர் விலாசிய ஜடேஜா, கடைசி பந்தை பவுண்டரி அடித்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த பதிவில் "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படையின் 5வது ஐபிஎல் டிராபிக்கு வாழ்த்துக்கள் தோனி. இது மிகச் சிறந்த கிரிக்கெட் மற்றும் நெருக்கடியை எதிர்கொண்ட ஜடேஜா CSK க்கு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin wishes to csk IPL champion


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->