பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மாரியப்பன்! சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேல். இவர், பிரான்சில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தனது சொந்த ஊரான வடகம்பட்டிக்கு மாரியப்பன் தங்கவேல் நேற்று வந்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரியப்பனுக்கு தீவட்டிபட்டி பேருந்து நிலையம் அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து மாரியப்பனை வரவேற்றார். அவருடன் மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

இதை தொடர்ந்து, கிராம மக்கள் மாரியப்பனை தீவட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக திறந்த காரில் அழைத்துச் சென்றனர். அவரது கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மேலதாலத்தோடு உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும், மாரியப்பன் தங்கவேல் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது, நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்வதே எனது இலக்கு என்று நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mariappan won bronze in Para Olympics Enthusiastic welcome in hometown


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->