#IPL2022 : கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டாவதாக நடைபெற்ற 53வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  டி காக் 50 ரன்களும், தீபக் ஹூடா 41 ரன்களும், ஸ்டோய்னிஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

அதனை தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 45 ரன்களும், ஆரோன் பின்ச் 14 ரன்களும், சுனில் நரைன் 22 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.

சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணி தரப்பில் ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lucknow super Giants win by 75 runs against Kolkata knight riders


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->