அனல் பறக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.. ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ அணி.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தது. இதில் அந்த அணியில் கேப்டன் கேஎல் ராகுல் 68 ரன்களும், தீபக் கூட 51 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷெப்பர்டு, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 44 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி சார்பில் ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், பாண்டியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

LSG beat by 12 runs sunrisers Hyderabad


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->