விரல் நடுக்கத்தை குறைக்க.. கவனமா பாருங்க... குச்சி விளையாட்டு.!! - Seithipunal
Seithipunal


தற்போது கிராமத்து விளையாட்டுகள் எல்லாம் அரிதாகி கொண்டு வருகிறது. மறைந்து போன விளையாட்டுக்களை நினைவுக்கூறும் வகையில் இன்று நாம் விளையாட இருக்கும் விளையாட்டு... குச்சி விளையாட்டு.

இந்த விளையாட்டு மிகவும் கவனத்துடன் விளையாடக்கூடிய விளையாட்டாகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு நபர் முதல் விளையாடலாம்.

விளையாட தேவையானது :

ஒரே அளவில் 10 குச்சிகள்.

சற்று நீளமான குச்சி ஒன்று.

எப்படி விளையாடுவது?

விளக்குமாறில் உள்ள சீவக்குச்சிகளை ஒரே அளவில் 10 குச்சிகளை எடுத்துக்கொள்ளவும். அதன்பின் இக்குச்சிகளைவிட சற்று நீளமுள்ள குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

இந்த 11 குச்சியையும் ஒரு சேர பிடித்து அவற்றை நிலத்தில் ஒரே வீச்சில் எறிய வேண்டும். அல்லது உள்ளங்கையால் உருட்டியும் போடலாம்.

பின் கீழே விழுந்துக்கிடக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக அலுங்காமல் எடுக்க வேண்டும். அலுங்காமல் எடுத்த குச்சிகள் வெற்றிப்புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

விளையாட்டின் பயன்கள் :

இவ்விளையாட்டு பொறுமையை வெளிப்படுத்தும்.

விரல் நடுக்கத்தை குறைக்கும்.

English Summary

kuchi game


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal