#IPL2022 : 54 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 61-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkata knight riders won by 54 runs against sunrisers hyderabad


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->