தென்னாப்பிரிக்க மண்ணில் கே.எல்.ராகுல் புதிய சாதனை.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் (பாக்ஸிங் டே) போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

மயங்க் அகர்வால் அரை சதத்தை கடந்து 123 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இறங்கிய புஜாரா தனது முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனைத்தொடர்ந்து கேஎல் ராகுல் உடன் அஜிங்கிய ரஹானே ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 272 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேஎல் ராகுல் 248 பந்துகளில் 122 ரன்கள் எடுத்துள்ளார். ரஹானே 81 பந்துகளில் 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

கேஎல் ராகுல் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் வசீம் ஜாஃபர் அவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kl rahul new record in south africa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->