சச்சின், கங்குலியை தொடர்ந்து கபில்தேவையும் அலறவிடும் நபர்! கிரிக்கெட் வாரியத்தில் தொடரும் பிரச்சனை!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) உறுப்பினர்களான கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோருக்கு டி.கே.ஜெயின், நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த மூவரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினர் சஞ்சீவ் குப்தா மேற்கண்ட மூவர் மீதும்  குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். குப்தாவின் புகரானது, கபில் தேவ் பல ஆதாயம் அளிக்கும் பதவிகளை கொண்டுள்ளார்.  ஒரு வர்ணனையாளர், ஒரு ஃப்ளட்லைட் நிறுவனத்தின் உரிமையாளர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர், மேலும் சிஏசியில் அவரது பங்கு என பி.சி.சி.ஐ.யின் அரசியலமைப்பை மீறி ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் தரக்கூடிய பதவிகளில் இருக்கிறார். பிசிசிஐ தற்போது ஒரு நபருக்கு ஒரு பதவியை மட்டுமே அனுமதிக்கிறது.

இதேபோல, கெய்க்வாட் ஒரு அகாடமியை வைத்திருக்கிறார் மற்றும் பிசிசிஐ குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான சாந்தா ரங்கசாமி, சிஏசி மற்றும் ஐசிஏ என இரண்டிலும் பதவிகளை வகிக்கிறார் என குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது. 

இதே குப்தா ஏற்கனவே பலருக்கு இந்த பிரச்சனையை உருவாக்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் சாம்பியன் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் ட்ராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மன் ஆகியோரும் இந்த பிரச்சனையை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kapil dev also face problem because of gupta


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->