இந்திய வீரர் பும்ராவுக்கு என்னதான் ஆச்சு? வெளிநாட்டில் அறுவை சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து சென்றுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் விளையாடாமல் இருந்த நிலையில், அதன் பின்னர் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதனையடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா மீண்டும் களம் இறங்குவார் என தெரிவித்திருந்த நிலையில், காயம் இன்னும் முழுமையாக சரியாகததால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகினார்.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்காத பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் சோதனை செய்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் ஜாஸ்பிரித் பும்ரா அறுவை சிகிச்சைக்காக நியூஸிலாந்து சென்றுள்ளதார்.

அதன்படி, அடுத்து ஓரிரு நாட்களில் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit bumrah travelling to newzealand for back surgery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->