டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா.! - Seithipunal
Seithipunal


20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஸ்வர் குமார் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் டி20 போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 274 விக்கெட், சஹால் 271 விக்கெட், பியூஸ் சாவ்லா 270 விக்கெட், அமித் மிஸ்ரா மிஸ்ரா 262 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit bumrah get 250 wickets in t20 format


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->