120 டெஸ்ட் போட்டியில் ஒன்றாக ஆடியவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?! வாழ்விலே மறக்க முடியாத போட்டியாக அமைந்த சோகம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது கடந்த 24ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.  2 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி எட்டி பிடித்து வெற்றியை பதிவு செய்தது. 

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. இரண்டு தரப்பிலும் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் அதில் 2 விக்கெட்டுகள் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சென்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் இங்கிலாந்தின் தரப்பில் சோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மற்ற 28 விக்கெட்டுகளையும் இந்தியா இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினார்கள். 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 120 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடி உள்ள நிலையில், அவர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் சென்ற போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. மேலும் அவர்கள் இதுவரை இருவரும் சேர்ந்து 34 ஓவர்களுக்கு கீழாக வீசியதே கிடையாது என்ற நிலையில், இந்த போட்டியில் 19 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவுமே இன்றி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து சென்றுள்ளனர். அவர்களுடைய டெஸ்ட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக இந்த போட்டி அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

james anserson stuart broad together finish first match without wickets


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal