தல தோனிக்கு தலைவணங்கி மரியாதை செலுத்திய கேப்டன் ஜடேஜா.. வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போலவே நேற்றைய போட்டி கடைசி பந்து வரை பரபரப்பாகவே சென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூரியகுமாரி யாதவ் 32 ரன்னும், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்கள் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை உனத்கட் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரெடோரியஸ் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிராவோ இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். 

4 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் பவுண்டரி விளாசினார். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே தள்ளப்பட்டது. இறுதிப் பந்தில் எம்எஸ் தோனி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

இதையடுத்து, மைதானத்திற்கு வந்த சென்னை அணி வீரர்கள் தோனிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது கேப்டன் ரவிந்திர ஜடேஜா முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jadeja Thanks to MS Dhoni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->